'ஒரு நல்ல டாக்டரை போய் பாரு'.. மஹத்துக்கு அட்வைஸ் செய்த சென்றாயன்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Dev3 2 News June 11 BT

பிக்பாஸ் வீட்டில் தண்ணீர் டாஸ்க் 'சிந்துபாத்' கதையாக நீண்ட கொண்டிருக்கும் வேளையில், இன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்கள் கதறி அழுவது போல காட்சிகள் இருந்தன.

 

தொடர்ந்து வெளியான 2-வது ப்ரோமோ வீடியோ வில் மஹத்-சென்றாயன் இடையே சண்டை மூளுவது போலவும், மஹத் தகாத வார்த்தைகளால் அவரைத் திட்டுவது போலவும் காட்சிகள் இருந்தன.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் முடிஞ்சா ஒரு நல்ல டாக்டரைப் பாரு என சென்றாயன் மஹத்துக்கு அட்வைஸ் செய்வது போலவும், பதிலுக்கு மஹத் சென்றாயனிடம் கோபப்படுவது போலவும் காட்சிகள் உள்ளன.

 

இதனால் இன்றிரவு பிக்பாஸ் வீட்டில் பல சண்டைகள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'ஒரு நல்ல டாக்டரை போய் பாரு'.. மஹத்துக்கு அட்வைஸ் செய்த சென்றாயன்! VIDEO